இந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால்!

இந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால்!

இந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

22ஆண்டுகளுக்கு முன்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். இந்தியன் தாத்தா ரோலில் வந்த கமல், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கொலை செய்வார். இந்த படம் மெஹா ஹிட்டானது. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படங்களில் இந்தியன் படமும் ஒன்று.

இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும் இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
விபத்தில் அவர் இறந்துவிட்டதாக போலீஸ் கருதுவதுபோன்றும், ஆனால் வெளிநாட்டில் அவர் இருப்பது போன்றும் முதல் பாகம் படத்தை முடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்திலும் முதியவர் வேடத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.

இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளன.
வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
கடந்த இந்தியன் படம் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிரான படமாக இருந்தது. இந்தியன் இரண்டாம் பாகம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கமல் ஏற்கனவே இந்தியன் இரண்டாம் பாகம் முழு அரசியல் படம் என்று கூறியிருந்தார்.

Rj Shifan Raniff

December 3rd, 2018

2 Comments

2 Comments

  1. Aw, thiѕ was ann incredibly nice post. Finding the time and actual effort to make
    a great artіcle… but what can I say… I procrastinate
    a lot and don’t seem to get neaгly anything done. http://rhughes.ulidiacollege.com/?p=367580

  2. A personal daily journal could become your
    best evidence in your court lawsuit. It’s nice to achieve one
    sketch because well as write when. Using a court watch form basically evaluates the judge. https://scr888.group/other-games-download/2491-download-play8oy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio