லைகா சுபாஷகரனுக்கு ரசிகர் மன்றம் – சந்திரமுகியாக மாறிய ரஜினி ரசிகர்கள்

லைகா சுபாஷகரனுக்கு ரசிகர் மன்றம் – சந்திரமுகியாக மாறிய ரஜினி ரசிகர்கள்

ரஜினி நடிப்பில் லைகா சுபாஷ்கரன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிருக்கும் 2.0 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் இந்தியாவின் மிக அதிகப் பொருட்செலவில் உருவான என்ற பெருமையுடன் 2.0 படம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினிப் படம் ரிலிஸ் என்றாலே ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுதல், கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தல், காவடி எடுத்தல், மொட்டை அடித்தல் எனப் பல உணர்ச்சி வசமான செயல்களை செய்வது வழக்கம். இந்த செயல்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கேலிக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாவது வழக்கம்.

ஆனால் இந்தமுறை அதையெல்லாம் தாண்டி ஒரு செயலை செய்துள்ளனர். ரஜினி நடித்த 2.0 படத்தைத் தயாரித்த சுபாஷகரனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து தங்கள் அன்பை(?) வெளிப்படுத்தியுள்ளனர். கிருஷணகிரி மாவட்டம் சந்தூரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ‘ தமிழ் சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த எஙகள் அண்ணன் சுபாஷ்கரனுக்கு மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்ற அடைமொழியோடு கூடிய கட் அவுட்களை கிருஷ்ணகிரியில் வைத்துள்ளனர்.

இந்த கட் அவுட்கள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன. நெட்டிசன்கள் பலர் இந்த செயலை கலாய்த்துத் தள்ள ஆரம்பித்துள்ளனர்.

Rj Shifan Raniff

December 3rd, 2018

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio