Cinema News

இந்த புத்தாண்டின் முதல் சினிமா செய்தி ‘சூர்யா 37’ அப்டேட் தான்!

இந்த புத்தாண்டின் முதல் சினிமா செய்தி ‘சூர்யா 37’ அப்டேட் தான்!

2019ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் சென்னை உள்பட பல பெரிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த புத்தாண்டின் முதல் சினிமா செய்தி சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 37’ படத்தின் அப்டேட் தான் என்பது சற்றுமுன் தெரிய வந்துள்ளது.

இன்று நள்ளிரவு சரியாக 12.00 மணிக்கு புத்தாண்டு பிறந்தவுடன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் ‘சூர்யா 37’ படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதாவது 12.10க்கு ‘சூர்யா 37’ படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என இந்த படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் குறித்து ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு ‘மீட்பான்’, ‘காப்பான்’ மற்றும் ‘உயிர்கா’ ஆகிய மூன்று டைட்டில்களில் ‘உயிர்கா’ என்ற டைட்டில் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Rj Shifan Raniff

December 31st, 2018

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio