ராதிகா ஆப்தேவிடம் அடி வாங்கிய நடிகர் அடையாளம் தெரிந்தது

ராதிகா ஆப்தேவிடம் அடி வாங்கிய நடிகர் அடையாளம் தெரிந்ததுராதிகா ஆப்தேவிடம் அடி வாங்கிய நடிகர் அடையாளம் தெரிந்தது

ஒரு பிரபல நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக நடிகை ராதிகா ஆப்தே கூறினார். அந்த நடிகர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அடி வாங்கிய நடிகரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. #RadhikaApte

இந்தி நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த போது அவர் சொன்ன வி‌ஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“தென் இந்திய படத்தில் முதல் நாள் நடித்த போது ஒரு பிரபல நடிகர் என் காலை வருடினார். அவருடைய கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டேன்” என்று கூறினார்.

ராதிகா ஆப்தே தெலுங்கு படத்தில் நடிக்கும் போது தான் இந்த சம்பவம் நடந்தது என்று இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பின் போது, ராதிகா ஆப்தே உடல் நலம் இல்லாமல் படுத்திருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக படுத்திருந்த ராதிகா ஆப்தேவின் கால்களை வருடிய நடிகரைத்தான் அனைவர் முன்பும் ராதிகா ஆப்தே கன்னத்தில் அறைந்து இருக்கிறார். இது பற்றிய விவரத்தை கூறியுள்ள ராதிகா ஆப்தே, “என்னிடம் அடி வாங்கியது பெரிய நடிகர். அவர் அதிகாரம் படைத்தவர் என்று என்னிடம் கூறினார்கள். யாராக இருந்தால் எனக்கு என்ன? அடி வாங்கியதில் இருந்து அவர் என்னை மறுபடியும் தொடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு பட உலகில் அதிகாரம் படைத்தவர் என்று ராதிகா ஆப்தே கூறியது எந்த நடிகர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. நடிகையிடம் அடிவாங்கிய பிரபல நடிகர் பற்றி தெலுங்கு பட உலகில் பரவலாக பேசப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *