நரம்பு புற்றுநோய் கட்டி – நடிகர் இர்பானுக்கு லண்டனில் சிகிச்சை

நரம்பு புற்றுநோய் கட்டி – நடிகர் இர்பானுக்கு லண்டனில் சிகிச்சைநரம்பு புற்றுநோய் கட்டி – நடிகர் இர்பானுக்கு லண்டனில் சிகிச்சை

பாலிவுட்டில் பிரபல நடிகரான இர்பான் கானுக்கு விசித்திரமான புற்றுநோய் தொற்று ஏற்பட்டிருப்பதால் மேல் சிகிச்சைக்காக அவர் லண்டன் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல குணச்சித்திர நடிகர் இர்பான். இவர் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ உள்பட ஏராளமான படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். விளம்பர படங்களிலும் மாடலிங் செய்து வந்தார்.

இவருக்கு சமீபத்தில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு விசித்திரமான புற்றுநோய் தாக்கி இருப்பது தெரியவந்தது.

நரம்பியல் உட்சுரப்பியில் புற்றுநோய் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக அவருக்கு மும்பையில் பல வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரை மேல் சிகிச்சைக்காக லண்டன் அல்லது அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இர்பான் நேற்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் லண்டன் கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டனில் வசிக்கும் இந்திய டாக்டர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இர்பானை அவரது மனைவியும் உடன் இருந்து கவனித்து வருகிறார். இன்னும் சில வாரங்களுக்கு அவர் லண்டனில் சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *