நயனுக்கு ஜோடியாக அனிருத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

நயனுக்கு ஜோடியாக அனிருத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்நயனுக்கு ஜோடியாக அனிருத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கு வயது 33 ஆனபோதிலும் இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதால் இவரது வயது தெரிவதில்லை

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவர் ஒரு வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்து வருவதாகவும், அவருக்கு இந்த படத்தில் ஜோடியே இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி, நயன்தாராவுக்கு அனிருத் ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அனிருத் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக வந்தாலும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே தோன்று கெளரவ தோற்றம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் 33 வயது நயனுக்கு 27 வயது அனிருத் எப்படி பொருந்துவார், வயதில் மட்டுமின்றி உடல் அமைப்பிலும் நயன்தாராவுக்கு தம்பி போல் இருக்கும் அவரை எப்படி இயக்குனர் நெல்சன் ஜோடியாக தேர்வு செய்தார் என்ற ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர் நயனின் ரசிகர்கள். இந்த செய்தி விக்னேஷ் சிவனுக்கு தெரியுமா? என்று கேள்வியும் எழுந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *