நடிகர் சங்க கட்டிடத்துக்கு நடிகை விஜயகுமாரி 5 லட்சம் நிதி உதவி!

நடிகர் சங்க கட்டிடத்துக்கு  நடிகை விஜயகுமாரி 5 லட்சம் நிதி உதவி!


தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான வேலைப் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு நிதிஉதவியாக ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியிருக்கிறார் நடிகை விஜயகுமாரி.

பழம்பெரும் நடிகை விஜயகுமாரி. 1950 களில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திராவிட இயக்க சினிமா வரலாற்றில் இவருக்கென்று தனி இடம் உண்டு. திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனைத் திருமணம் புரிந்து கொண்டார். தங்கமகன், மாவீரன், நான் மகான் அல்ல, பூவே உனக்காக, தெனாலி போன்ற படங்களில் நடித்து காலம் கடந்த நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான விஜயகுமாரி, தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்தை கட்டி எழுப்புவதற்காக தன்னால் இயன்ற நிதியை அளித்துள்ளார். நடிகர் சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தியை சந்தித்து சந்தித்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதற்கான அறிவிப்பை நடிகர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

The post நடிகர் சங்க கட்டிடத்துக்கு நடிகை விஜயகுமாரி 5 லட்சம் நிதி உதவி! appeared first on Tamilcinema.com.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *