டுவிட்டரை ரணகளமாக்கிய கருணாகரன்

டுவிட்டரை ரணகளமாக்கிய கருணாகரன்டுவிட்டரை ரணகளமாக்கிய கருணாகரன்

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் கருணாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் செய்த ஒரு பதிவால் ரசிகர்களிடையே ரணகளமாகி இருக்கிறது.

ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு மட்டும் நேற்று சென்னையில் நடந்தது. இந்த படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதிலும், ஒருசில தயாரிப்பாளர்கள் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன், ஸ்டிரைக் இருக்கு ஆனா இல்ல என்று எஸ்.ஜே.சூர்யா புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். பின்னர், ‘தமிழன்னு சொன்னாலே திமிர் ஏறும்’ உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா? என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மெர்சல் படத்தின் அந்த பாடலில் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய், நிஜத்தில் ஒற்றுமைக்கு ஒத்துழைக்காமல் படப்பிடிப்பு நடத்துவதாக அர்த்தம் தொணிக்கும் வகையில் இந்த டுவிட்டை பதிவு செய்திருக்கிறார்.

கருணாகரனின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அஜித் ரசிகர்கள் கருணாகரனுக்கு ஆதரவாக களமிறங்க, டுவிட்டரே ரணகளமாகி வருகிறது. கருணாகரன் உண்மையில் விஜய் கலாய்ப்பதற்காக இந்த டுவீட்டை போட்டாரா? அல்லது வேற அர்த்தமா? என்று அவரே விளக்கம் அளித்தால்தான் இந்த பிரச்சனை தீரும்’.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *