காதல் கணவன் ‘கயல்’ சந்திரன் உருகிய அஞ்சனா

காதல் கணவன் ‘கயல்’ சந்திரன் உருகிய அஞ்சனா


பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் ஹீரோவான சந்திரனுக்கும் சன் டிவி தொகுப்பாளினி அஞ்சனாவிற்கும் இரண்டு வருடங்களுக்கு முன் மார்ச் 1௦ ஆம் தேதி காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமண வாழ்வில் இரண்டு வருடங்களை வெற்றிகரமாகக் கடந்துவிட்டார்கள்.

இதனையொட்டி திருமண நாள் அன்று கணவர் சந்திரனுக்கு ட்விட்டரில் நெகிழ்ச்சியோடு நன்றி சொல்லியிருக்கிறார் அஞ்சனா.

“சிரிப்பு, சந்தோஷம், சண்டை மற்றும் நிறைய காதல் என இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இதுபோல் இன்னும் நிறைய வருடங்கள் வரவேண்டும். மிக அழகான நீண்ட வாழ்க்கை நமக்கு இருக்கிறது எனத் தெரியும். நீ கிடைக்கப் பெற்றதில் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். லவ் யூ” என உருகியுள்ளார் அஞ்சனா.

The post காதல் கணவன் ‘கயல்’ சந்திரன் உருகிய அஞ்சனா appeared first on Tamilcinema.com.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *