ஐஸ்வர்யா ராஜேஷை இவ்வளவு பேர் பின் தொடர்கிறார்களா?

ஐஸ்வர்யா ராஜேஷை இவ்வளவு பேர் பின் தொடர்கிறார்களா?



ஐஸ்வர்யா ராஜேஷை இவ்வளவு பேர் பின் தொடர்கிறார்களா?

பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷை, டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

‘அட்டக்கத்தி’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘திருடன் போலீஸ்’, ‘காக்கா முட்டை’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த வருடம் இவருடைய நடிப்பில் ‘கட்டப்பாவ காணோம்’ என்ற வெளியானது.

தற்போது இவர் ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘வட சென்னை’, ‘லட்சுமி’, ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய படத்தின் செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது இவரது டுவிட்டர் பக்கத்தில் இவரை பின் தொடர்பவரின் எண்ணிக்கை 1 மில்லியனை தொட்டிருக்கிறது. மேலும் தன்னை பின் தொடர்பவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *