உடல் எடையை குறைக்க வொர்க்-அவுட் செய்யும் பிரபல நடிகை

உடல் எடையை குறைக்க வொர்க்-அவுட் செய்யும் பிரபல நடிகைஉடல் எடையை குறைக்க வொர்க்-அவுட் செய்யும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சினேகா நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவர் சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். தற்போது இவர்களுக்கு பிரசன்னா விகான் என்ற ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் அவர், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வந்த வேலைக்காரன் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்தில் கொஞ்சம் உடல் எடை கூடியிருந்ததாகக் கூறப்பட்டது.

இதனால் தன்னுடைய வெய்ட்டைக் குறைக்க ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார் சினேகா. இதற்காக ஜிம்மே கதி என்று இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு பக்கபலமாக இவரது கணவர் பிரசன்னா இருக்கிறாராம். தான் வொர்க்-அவுட் செய்யும் ஜிம் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை சினேகா. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *