‘இந்தியன் 2’ ஷூட்டிகிற்கு ரெடியாகும் கமல்ஹாசன்

‘இந்தியன் 2’ ஷூட்டிகிற்கு ரெடியாகும் கமல்ஹாசன்


இயக்குனர் ஷங்கரும் கமல்ஹாசனும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மாநில, மத்திய அரசுகளின் லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தி அதற்கான தீர்வை சொல்லும் கதையையும், திரைக்கதையையும் எழுதியுள்ளாராம் ஷங்கர்.

மார்ச் மாதம் ஷூட்டிங் என்று முன்பு சொன்னார்கள். அதேசமயம் கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் மாநாடு, கல்லூரியில் மாணவர் சந்திப்பு என்று பிசியாக இருக்கிறார். ஆனாலும் இப்போது அவர் வெள்ளை தாடியை வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

அது ‘இந்தியன் 2’ படத்திற்கான இன்னொரு கெட்டப் என்றும், விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாகப் போகிறது என்றும் பட வட்டாராம் கூறுகிறது.

The post ‘இந்தியன் 2’ ஷூட்டிகிற்கு ரெடியாகும் கமல்ஹாசன் appeared first on Tamilcinema.com.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *