‘அலைபாயுதே 2’ – ஆசைப்படும் மிஷ்கின் ஹீரோயின்

‘அலைபாயுதே 2’ – ஆசைப்படும் மிஷ்கின் ஹீரோயின்


மணிரத்னம் இயக்கிய காதல் படங்களில் முக்கியமானதும், மிகப் பெரிய வெற்றியும் பெற்ற படம்தான் ‘அலைபாயுதே’. இந்தப் படத்தில்தான் மாதவன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மாதவன், ஷாலினியின் கெமிஸ்ட்ரி அப்போதைய இளம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்நிலையில் ஒரு ஹீரோயின் ‘அலைபாயுதே 2’ எடுக்கப்பட்டால் அதில் ஹீரோயினாக நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். அவர் மிஷ்கின் திரைக்கதை எழுதி, நடித்த ‘சவரக்கத்தி’ படத்தில் நடித்த ஸ்வாதிஸ்டா.

‘‘அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்தான் எனக்கு ரோல்மாடல். அழகு, திறமையை அவர்கள் சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நடிப்பும், ஆளுமையும் வியக்க வைக்கின்றன.

அதேபோல நான் பிரமித்து பார்க்கும் இன் னொரு நடிகை ஷாலினி அஜித். மணிரத்னம் சார் கட்டாயம் ‘அலைபாயுதே 2’ படத்தை எடுப்பார். அதில் நான் நாயகியாக நடிக்க வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை’’ என்றிருக்கிறார் ஸ்வாதிஷ்டா.

The post ‘அலைபாயுதே 2’ – ஆசைப்படும் மிஷ்கின் ஹீரோயின் appeared first on Tamilcinema.com.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *