Cinema News

உடல் எடையை குறைக்க வொர்க்-அவுட் செய்யும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சினேகா நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். தற்போது இவர்களுக்கு பிரசன்னா விகான் என்ற ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் அவர், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வந்த வேலைக்காரன் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்தில் கொஞ்சம் உடல் எடை கூடியிருந்ததாகக் கூறப்பட்டது. இதனால் தன்னுடைய வெய்ட்டைக் குறைக்க ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார் சினேகா. இதற்காக ஜிம்மே கதி என்று இருந்து

நரம்பு புற்றுநோய் கட்டி – நடிகர் இர்பானுக்கு லண்டனில் சிகிச்சை

பாலிவுட்டில் பிரபல நடிகரான இர்பான் கானுக்கு விசித்திரமான புற்றுநோய் தொற்று ஏற்பட்டிருப்பதால் மேல் சிகிச்சைக்காக அவர் லண்டன் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. பிரபல குணச்சித்திர நடிகர் இர்பான். இவர் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ உள்பட ஏராளமான படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். விளம்பர படங்களிலும் மாடலிங் செய்து வந்தார். இவருக்கு சமீபத்தில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு விசித்திரமான புற்றுநோய் தாக்கி இருப்பது தெரியவந்தது. நரம்பியல் உட்சுரப்பியில் புற்றுநோய் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக அவருக்கு மும்பையில்

நயனுக்கு ஜோடியாக அனிருத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கு வயது 33 ஆனபோதிலும் இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதால் இவரது வயது தெரிவதில்லை இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவர் ஒரு வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்து வருவதாகவும், அவருக்கு இந்த படத்தில் ஜோடியே இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி, நயன்தாராவுக்கு அனிருத் ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அனிருத் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக வந்தாலும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே தோன்று

தளபதி விஜய்யின் மீது கோபம் கொண்ட சத்யராஜ்

சத்யராஜ் ரஜினியே வில்லனாக அழைத்தும் நடிக்க மறுத்தவர். ஆனால், விஜய் நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். அதை தொடர்ந்து தலைவா படத்தில் அவருக்கு தந்தையாகவும் நடித்திருப்பார், இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன் விஜய்யு, சத்யராஜும் ஒரு ஆடியோ விழாவில் கலந்துக்கொண்டனர். அப்போது சத்யராஜ் பேசுகையில் ‘நான் பிரமாண்டமாக ஒரு வீடு கட்டினேன், என்னுடைய வீட்டில் என் மகன் என் புகைப்படத்தை தானே மாட்டியிருக்க வேண்டும். அவன் ரூம் முழுவதும் விஜய் தம்பியின் புகைப்படம் தான் உள்ளது, அதை பார்த்ததுமே எனக்கு விஜய் மீது கோபம் வந்தது’ என ஜாலியாக சத்யராஜ் பேசினார். சத்யராஜ் பேசியதை

படங்கள் தோல்வி அடைந்தால் கவலைப்பட மாட்டேன் – அனுஷ்கா

கஷ்டப்பட்டு நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்தால் கவலைப்படுவது இல்லை என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடுகிறார். ஓம் நமோ வெங்கடேசாய, பாகுபலி, பாகமதி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தன. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சினிமா அனுபவம் பற்றி அனுஷ்கா சொல்கிறார்:- “கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் என்னால் நடிக்க முடியும் என்று பெயர் வாங்கி இருக்கிறேன். அதுபோன்று கதையம்சம் உள்ள பட வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.

“மிஷ்கின் சாரோட சேர்ந்து பதிலடி தரப்போறேன்!” – உற்சாக சாந்தனு

‘நந்தலாலா’ படத்திலேயே சாந்தனு கமிட் ஆகியிருக்கணும். ஆனா, இது கொஞ்சம் லேட்’னு சொன்னார் மிஷ்கின் சார். என்னோட வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம், மிஷ்கின் சாரை சந்தித்ததுதான். கண்டிப்பா இனி என்னோட சினிமா பயணம் வெற்றி அடையும்னு நம்புறேன்!” என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார் சாந்தனு. “சினிமாவின் அடுத்த கட்டம் மிஷ்கினுடனா?” ” ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ படத்தோட தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், மிஷ்கின் சாருக்கும் ரொம்பநாள் முன்னாடி ஒரு மீட்டிங் நடந்துச்சு. அப்போ மிஷ்கின் சார், ‘சாந்தனு முன்னவிட இப்போ ரொம்ப ஸ்மார்ட் ஆயிட்டான். அடுத்தப் படத்துல ஹீரோவா நடிக்க வெச்சா, உங்களுக்கு ஓகேவா’னு ரவி சார்கிட்ட கேட்டதும்,

டுவிட்டரை ரணகளமாக்கிய கருணாகரன்

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் கருணாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் செய்த ஒரு பதிவால் ரசிகர்களிடையே ரணகளமாகி இருக்கிறது. ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு மட்டும் நேற்று சென்னையில் நடந்தது. இந்த படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதிலும், ஒருசில தயாரிப்பாளர்கள் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன், ஸ்டிரைக் இருக்கு ஆனா இல்ல என்று எஸ்.ஜே.சூர்யா புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். பின்னர், ‘தமிழன்னு சொன்னாலே திமிர் ஏறும்’ உண்மையா? இல்லை

ஐஸ்வர்யா ராஜேஷை இவ்வளவு பேர் பின் தொடர்கிறார்களா?

பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷை, டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘அட்டக்கத்தி’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘திருடன் போலீஸ்’, ‘காக்கா முட்டை’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த வருடம் இவருடைய நடிப்பில் ‘கட்டப்பாவ காணோம்’ என்ற வெளியானது. தற்போது இவர் ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘வட சென்னை’, ‘லட்சுமி’, ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய படத்தின் செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை பகிர்ந்து வருகிறார். தற்போது இவரது டுவிட்டர்

ராதிகா ஆப்தேவிடம் அடி வாங்கிய நடிகர் அடையாளம் தெரிந்தது

ஒரு பிரபல நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக நடிகை ராதிகா ஆப்தே கூறினார். அந்த நடிகர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அடி வாங்கிய நடிகரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. #RadhikaApte இந்தி நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த போது அவர் சொன்ன வி‌ஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “தென் இந்திய படத்தில் முதல் நாள் நடித்த போது ஒரு பிரபல நடிகர் என் காலை வருடினார். அவருடைய கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டேன்” என்று கூறினார். ராதிகா ஆப்தே தெலுங்கு படத்தில் நடிக்கும் போது தான் இந்த

சினிமா கலைஞர்களின் பிரச்சனைக்கு எப்போதுமே விஜய் ஆதரவாக இருந்தது இல்லையா?- ஒரு அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடந்துவருவது எல்லோருக்கும் தெரியும். கடந்த சில நாட்களாக திரையரங்குகளில் எந்த ஒரு புதிய படங்களும் வெளியாவது இல்லை. இதற்கு நடுவில் ஸ்ட்ரைக் கூறிய பிறகும் விஜய்யின் 62வது படம், நாடோடிகள் மற்றும் சில படங்களின் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடக்கிறது என்று பலரும் கேள்வி கேட்டனர். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் விஜய் 62வது படத்தில் சில ஹைதராபாத் கலைஞர்கள் பணிபுரிவதாகவும் இந்த தேதியை விட்டால் அவர்களால் மறு தேதி கொடுக்க முடியாத நிலைமை என்று அப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்ததால் 3 நாட்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோம் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இதற்கு