Cinema News

#அசுரன்  (2020)

#அசுரன் (2020)

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை திரைப்படத்தினை தொடர்ந்து நான்காவது முறையாக அசுரன் திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதை தவிர வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, காக்கா முட்டை திரைப்படத்தில் தயாரிப்பாளராக தனுஷ் பணியாற்றியுள்ளார்.

இத்திரைப்படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், யோகிபாபு, பாலாஜி சக்திவேல், சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படத்தில் தனுஷுடன் விஜய் சேதுபதி நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

2018-ம் ஆண்டு தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் அமீரின் ராஜன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில் கைவிடப்பட்டது. தற்ப்போது அசுரன் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி தனுஷுடன் நடிக்கவுள்ளார் என்ற தகவல்களை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.

பின்னர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடுகளம் திரைப்படத்தில் பிரபலமான “ஒத்தசொல்லல” பாடலை எழுதிய பாடலாசிரியர் ஏகாதசி இப்படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார். எனவே அசுரன் திரைப்பட பாடல்களும் ஆடுகளும் திரைப்பட பாடல்கள் போலவே வெற்றிபெறும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.

Rj Shifan Raniff

May 23rd, 2019

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio