Cinema News

பிரபல நடிகரை திருமணம் செய்யப்போகும் டாப்ஸி!

பிரபல நடிகரை திருமணம் செய்யப்போகும் டாப்ஸி!

பிரபல நடிகரை திருமணம் செய்யப்போவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். 

தமிழில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படம் ஆடுகளம், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி.  மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் மூலம் நடிகை டாப்ஸி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த ஆரம்பம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.  தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ள இங்கு இவரால்  முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை எனவே பாலிவுட்கு பக்கம் பறந்தார். அக்கட தேசத்தில் அம்மணிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால்  இந்தியில் படுபேமஸ் ஆனார்.

 இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட டாப்ஸி யாரை திருமணம் செய்ய ஆசை இருக்கிறது என்று கேள்விக்கு நடிகர் விக்கி கோஷலை திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  நடிகை டாப்ஸி சமீபத்தில் விக்கி கோஷளுடன் சேர்ந்து குடித்துவிட்டு ரகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

Rj Shifan Raniff

May 16th, 2019

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio