Cinema News

முடிவுக்கு வந்த காஜல் அகர்வாலின் அடுத்த படம்!

முடிவுக்கு வந்த காஜல் அகர்வாலின் அடுத்த படம்!

அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை காஜல் அகர்வால் நடித்த ‘பாரீஸ் பாரிஸ்’ திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தில் அவருடைய காட்சியின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது

முதல்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘கோமாளி’ என்ற படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் காட்சியின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது.

இதனையடுத்து படக்குழுவினர் காஜல் அகர்வாலுக்கு ஸ்பெஷல் பார்ட்டி வைத்து வழியனுப்பி வைத்தனர்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்த்ஹ்டா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபபு, கவிதா, சம்பத்ராஜ், நிதின் சத்யா, பசுபதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Rj Shifan Raniff

April 8th, 2019

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio